வடக்கில் மழை பெய்வதற்கான சாத்தியம்!

இலங்கையின் மேற்கு பகுதியில் அராபியக் கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 950 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வலுவிழந்து நாட்டை விட்டு மேலும் விலகி செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டிலும் மேற்கு கடற்பரப்பு வானிலையிலும் இதன் தாக்கம் மிகவும் குறைவாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப்பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும்.

மின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.