கணவரை கொலை செய்தது ஏன்? மனைவி வாக்குமூலம்..

இந்தியாவில் கணவரை அடித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் நீரஜ் மீவேதா (25). இவர் மனைவி நீது. தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நீது தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் ரத்தம் படிந்த நிலையில் வீட்டின் முதல் மாடியில் நீரஜ் இருதினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நடத்திய விசாரணையில் நீரஜை கொலை செய்தது அவர் மனைவி நீது என தெரியவந்தது.

இதையடுத்து நீதுவை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு விருப்பமில்லாமல் நீரஜுடன் திருமணம் நடந்தது.

அவருடன் பல தடவை சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளேன்.

நீரஜுக்கு தோல் நோய் இருந்தது, இதனால் அவரிடம் பேசுவதை கூட நான் விரும்பவில்லை. இதனால் என் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்.

இதனால் அவர் தூங்கி கொண்டிருந்த போது கூரான ஆயுதத்தை வைத்து அடித்து கொன்றதாக கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.