புதிய கட்சி பெயரை அறிவித்த டிடிவி தினகரன்!

மதுரை மேலூரில் தற்போது நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அதற்கான பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களுக்கு தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் தனது புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தினகரன் அறிவித்துள்ளார். இதோடு கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொடியானது கருப்பு,வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ள நிலையில் கொடியின் நடுவே ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.