பெரும்பாலும் இரண்டு பாம்புகள் எங்காவது பின்னிக்கொண்டிருந்தால் அவை காதல் போதையில் நடனமாடுகின்றன என்றுதான் பலரும் நினைப்பார்கள்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் நடக்கும் இந்நடனத்தினை எத்தனை பேர் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தாலும் அதனை அப்பாம்புகள் கண்டுகொள்வதில்லை.
இதனை இனப்பெருக்கத்திற்காக நடக்கும் சம்பவம் என்றுதான் நாம் இத்தனை நாள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் இவ்வாறான நடனம் எதற்காக தெரியுமா?
இந்த பாம்புகளில் ஒன்று கூட பெண் பாம்பு கிடையாதாம். இரண்டுமே ஆண் பாம்புகள் தானாம்… ஒரு பெண் பாம்புடன் யார் இணைவது என்று தீர்மானிப்பதற்கான வீர விளையாட்டு தான் இதுவாம்…
சரி, இதில் வெற்றி தோல்வி எப்படி தீர்மானிக்கப்படும்? இவ்வாறு உடலை பிணைத்து உயரே எழும்பும் போது எந்தப் பாம்பின் தலை மேலே இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாகும்.
பின்னர் தோல்வியடைந்த பாம்பு, நேர்மையாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இடத்தை காலி செய்யும், வெற்றி பெற்ற பாம்பு மறைந்திருக்கும் பெண் பாம்பை சொந்தம் கொண்டாடி அதனுடன் இணைந்து இனவிருத்தியில் ஈடுபடுமாம்.