இந்தியாவில் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட தானும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சம்பத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு திருமணமாக 3 மற்றும் 4 வயதில் மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் திடீரென மரணமடைந்தார்.
அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரியும் ரஞ்சித் என்பவருடன் ஸ்ரீஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ள நிலையில், குறித்த நபர் பெற்றோர்களின் கட்டாயத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த ஸ்ரீஜா இவ்வாறான தற்கொலை முடிவினை எடுத்துள்ளார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.