அமெரிக்காவை சேர்ந்த இராணுவ பெண் விமானியை அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஒரு இரவில் அமெரிக்காவின் மினியாபோலிஸில் நகரில் Betty Pina என்ற பெண் விமானிக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
அதை குடித்த பின்னர் மயங்கிவிட்ட Betty Pina கலையில் எழும் போது ஆடைகள் கலைந்தவாறு குறித்த விமானியின் வீட்டில் இருந்துள்ளார்.
அந்த அறை முழுதும் வாந்தி மற்றும் மது வாசனையோடு இருந்தது மட்டுமல்லாமல் Betty Pina தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக உணர்ந்துள்ளார்.
இவை அனைத்தையும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பலாத்காரம் செய்த விமானி இன்றும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானியாக பணியில் தொடர்கிறார் என்று கூறியது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட Betty Pinaவும் ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ விமானி ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் போர் உள்ளிட்டவற்றில் பங்கு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Betty Pinaவின் குற்றச்சாட்டை தொடர்ந்து பதில் அளித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்,
“ இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியே எங்களுக்கு முக்கியம். எங்கள் ஊழியர் மேல் தவறு இருப்பது உறுதியானால் நிச்சயம் பணி நீக்கம் செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.