இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் முடிவு?

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பை திருப்பியழைப்பதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இராஜதந்திர நெறிமுறைகளை மீறி இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கத் தூதுவர் நேரடியாகத் தலையிடுகின்றார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகாரப் பிரிவு ஆராய்ந்துவருகின்றது.

கண்டி கலவரம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் வெளியிட்டிருந்த கருத்து மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்பட்டவேளை அவர் செயற்பட்ட விதம் உட்பட மேலும் சில காரணிகளே அவருக்கு எதிராக மாறி விட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.