இந்தியாவில் நண்பருடன் சேர்ந்து நகைக்காக வளர்ப்பு தாயை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் விஜயம்மா (55), அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகாத நிலையில் சோனு சிங் (29) என்ற பெண் இவரின் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
சோனுவுக்கும் யாரும் இல்லாததால் அவரை வளர்ப்பு தாயாக விஜயம்மா பல காலமாக வளர்த்து வந்தார். ஆனால் சோனு வெளியில் தங்கிருந்தாலும், விஜயம்மாவை அடிக்கடி வந்து பார்ப்பார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் விஜயம்மா வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் அவரை காண வந்தபோது ரத்த வெள்ளத்தில் விஜயம்மா சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது விஜயம்மாவை சோனு தனது நண்பர் குமாருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
சோனுவும், குமாரும் நிதி நெருக்கடியில் இருந்ததால் விஜயம்மாவின் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அவரை கொன்றுவிட்டு நெக்லஸ், இரண்டு வளையல்கள், தோடுகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்த நகைகளை மீட்டுள்ளனர்.