இந்தியாவில் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நபர், பிரேத பரிசோதனைக்கு முன்பாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹிமான்சு பரத்வாஜ், இவர் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்வாஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், அவரது உடலை அன்றைய நாள் இரவே பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் காலையில் பரத்வாஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அங்கு திடீரென அவரின் உடல் அசைந்ததை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், பரத்வாஜ் மூச்சு விடுவதையும் மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் சிகிச்சைக்காக பரத்வாஜை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்களின் அலட்சியமே, பரத்வாஜ் பிணவறை வரை கொண்டு செல்ல காரணம் என்ற தகவல் பரவியது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே கூடிய மக்கள், மருத்துவர்களுக்கு எதிரான வாக்கியங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.