மருதாணி இலைகளை பேக் போல தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை காண முடியும்.
மருதாணி டிப்ஸ் – 1
மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போல தட்டி நிழலில் உலர்த்தி, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் வைத்த பின் அந்த ஆயிலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வந்தால் விரைவில் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும்.
மருதாணி டிப்ஸ் – 2
செம்பருத்தியின் இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, அதில் சிறிது தயிரை கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
இம்முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி பளபளப்பாகும், முடி கொட்டுவது குறையும்.
மருதாணி டிப்ஸ் – 3
மருதாணி இலையை கெட்டியாக அரைத்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து முடியில் தடவி வந்தால் முடி பளபளப்பாகும்.
மருதாணி டிப்ஸ் – 4
மருதாணி இலையுடன் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து, தலையில் பேக் போல போட்டு காய்ந்ததும் குளித்து வர முடி கருப்பாகும்.
மருதாணி டிப்ஸ் – 5
மருதாணி இலையை காயவைத்து பொடி செய்து அதில் 2 கப், டீ டிகாஷன் தேவையான அளவு, எலுமிச்சை சாறு 1 பழம், 1 முட்டையின் வெள்ளை கரு, காபி பொடி 2 மேசைக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 கப்.
ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கி, அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலந்து அதை தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
குறிப்பு
இயற்கை முறையில் விளையும் மருதாணி இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே இதன் பலன்களை பெற முடியும். ஆனால் கடைகளில் கிடைக்கும் மெஹந்தி பாக்கெட்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.