முகத்தை பாதுகாக்க 15 நிமிடம் போதும்!

வெயிற்காலங்களில் முகம் பொலிவின்றி கருமையடைந்து காணப்படும். இதனை எளிதில் போக்க கீழ்குறிப்பிட்ட வழிமுறையை தினமும் பின்பற்றுங்கள்.

தேவையானவை
  • வெந்தயம் ஊற வைத்தது – 1 ஸ்பூன்
  • தயிர் – தேவையான அளவு

முதலில் தயிரையும் வெந்தையத்தையும் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பேஸ்டை முகத்தில் பூசிக் கொள்ளவும், பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்வதனால் முகம் பொலிவு பெறும்.