5 தமிழ் இலவச இணைய மென்பொருள்! – அறிமுகப்படுத்திய தமிழக அரசு!

ஐந்து மென்பொருள்கள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ் இணைய கல்விக்கழகத்தினால், தமிழ் இணைய மென்பொருள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 மென்பொருள் அடங்கிய தொகுப்பு, தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டது.  தமிழிணையம் அகராதித் தொகுப்பு, தமிழிணையம் தரவுப் பகுப்பாய்வு, தமிழிணையம் கருத்துக்களவு ஆய்வு, தமிழிணையம் சொற்றொடர் தொகுப்பு, தமிழிணையம் பிழை திருத்தி, ஆகிய 5 மென்பொருள்கள் கொண்ட தொகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த மென் பொருள்கள்மூலம் தமிழ் சொல்லுக்கு பொருள் அறிதல், தமிழில் எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல், தமிழ்லெக்ஸிகன், கதிரைவேல் பிள்ளை அகராதி போன்ற அகராதிகளில் உள்ள பொருள் அறிதல், சொற்களைத் தொகுத்து வழங்குதல், வகைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இது தட்டச்சர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் கல்விக் கழக இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பதிவுசெய்து, இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.