நடிகர் ரகுவரன் என்றதும் முதலில் நம் நினைவிற்க்கு வருவது… தனித்துவமான குரல், பேச்சு, 6அடி உயரம், ஒல்லியான தோற்றம் என காட்சியளித்த அவரின் கம்பீரமான முகம் தான். நடிப்பில் ஹீரோக்களுக்கு நிகராக குணசித்திர வேடத்தில் நடித்து அசத்தியவர் இவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
பொதுவாக வில்லன் என்றால் வாட்டம் சாட்டமாக இருக்க வேண்டும். பார்ப்பவர் பயம் கொள்ளும் தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதை முற்றிலும் தவிடு பொடியாக்கியவர் நடிகர் ரகுவரன்.
இவர் ரஜினிக்கு சமான கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த ‘பாட்ஷா’ படம் இவருடைய நடிப்பில் மையில் கல் என கூறலாம் . வில்லன் கதாப்பாத்திரத்தையும் தாண்டி ரோஜாகூட்டம், யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் ஹீரோக்களுக்கு அப்பாவாகவும் நடித்தவர்.
பிரபல நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திரையுலகில் பிஸியான நடிகராக இருந்த போதே திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தமிழில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரகுவரனின் நடிப்பின் சாதனைகள் சொல்லில் அடங்காதவை. இவர் வில்லனாக பல படங்களில் நடித்தாலும் மிகவும் நல்ல மனிதர் என்பது திரைத்துறையில் இவருடன் பயணித்து பலருக்கும் தெரியும்.
இவரை பற்றி இதுவரை வெளிவராத தகவலை வெளியிட்டுள்ளார் இவருடைய மனைவி ரோகினி. இது குறித்து அவர் கூறுகையில்… ரகுவரன் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம், பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று தானாம்.
சென்னை வந்து சில நாள் இதற்கு பயிற்சி எடுத்தது மட்டுமின்றி, இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துள்ளாராம்.
எதர்ச்சியாக நடிக்க துவங்கிய இவர் மிகப்பெரிய நடிகராக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார் இதனால் இவருடைய இளையமைப்பாளர் கனவு நிறைவேறாமலே போய் விட்டது.