வைரலாகும் மலைக்கா அரோரா-ன் உடற் பயிற்ச்சி!

மலைக்கா அரோரா மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். இவர் டான்ஸ் மற்றும் மாடலிங் செய்து வருகிறார். தற்போது தொலைக்காட்சி ஷோக்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான் நடித்து இந்தியில் வெளியான ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சைய சைய சையா’ என்ற பாடலில் மலைகா ஆடிய நடனம் மிகவும் பிரபலமானது. இந்த படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியானது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் மலைகா அரோரா காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில், இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் விவாகரத்து பெற்றனர். மகனை மலைக்கா அரோராவிடம் வளர்ந்து வருகிறார்.

மலைகா அரோரா எப்பொழுதும் தனது உடம்பை கட்டுகோப்புடன் வைத்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர். இதற்காக அவர் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

சமிபத்தில், அவர் உடற் பயிற்ச்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ, தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.