யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் தனியாருக்கு சொந்தமான 50 வீடுகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் சுமார் 111 பொலிஸார் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வீடுகளை விடுவிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸ் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கோரி இருந்தார்.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பொலிஸார், தங்களுக்கு மாற்று வீட்டுத்திட்டம் அமுலாக்கப்படும் வரையில் அவற்றை விடுவிக்க முடியாது என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.