சௌந்தர்யா-ன் முன்னாள் கணவரின் வைரலாகும் 2வது திருமண புகைப்படம்!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வினுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டதாக கூறி இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சௌந்தர்யாவு மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும்  திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக சௌந்தர்யாவுக்கும், அஸ்வினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2016 டிசம்பர் மாதம் சௌந்தர்யாவும் மற்றும் அவரது கணவர் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் நீதிபதி மரியா கிளட் கடந்த ஜூலை 5-ம் தேதி சௌந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சௌந்தர்யா அப்பா, அம்மாவுடன் தங்கி பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் முன்னாள் கணவர் அஸ்வின் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.

அவர் 2வது மனைவியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.