இலங்கையில் ஜேர்மனிய தம்பதியர் செய்த மகத்தான பணி!

இலங்கையில் ஜேர்மனிய தம்பதியர் செய்த மகத்தான பணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் 12 பாடசாலைகள் மற்றும் 103 வீடுகளை கட்டுவதற்கு ஜேர்மனிய தம்பதியினர் உதவி செய்துள்ளனர்.

லூட்ஸ் மெலசோவஸ்கி மற்றும் பாபரா மெலேசோவஸ்கி ஆகிய ஜேர்மன் தம்பதியினரே இந்த சேவையை செய்துள்ளனர்.

வெலிபன்ன பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மத்துகம பிரதேச சபையில் கல்மத்த பகுதியில் ஜேர்மன் தம்பதியினால் பாடசாலை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

பாடசாலையின் 10வது வருடாந்த நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த ஜேர்னம் தம்பதியின் உதவியில் நிர்மாணிப்பட்ட பாடசாலையின் 10வது வருட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த தம்பதியின் உதவியில் இதுவரையில் 12 பாலர் பாடசாலைகளும், 103 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் தம்பதியினரை வரவேற்பதற்காக மாணவர்களும் இணைந்திருந்தனர்.