என்றும் 16 ஆக ஜொலிக்க தினமும் இப்படி பண்ணுங்க?

இயற்கை அன்னைக்கு படைத்த பழங்கள், காய்கள் போன்றன எம்மை என்றும் இளமையாக வைத்திருக்கும் என்பது பலருக்கு தெரிவது இல்லை. அதுதான் பழங்களை எல்லாம் விட்டு விட்டு செயற்கை பொருட்களை பாவிப்பதில் ஆர்வம் காட்டுகின்னனர்.

பழத்தில் பி, சி, ஈ போன்ற வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை உங்கள் கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.

“அவகடோ உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தி பருக்கள், முகப்பரு, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் புள்ளிகள் ஆகியவற்றிற்கு நிவாரணமளித்து மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் உணரச் செய்கிறது”

இதர இயற்கையான மூலக்கூறுகளுடன் கலந்த அவகடோ முகப்பூச்சு உங்கள் சருமத்தின் மீது அற்புதங்களை நிகழ்த்தும்.

இந்தக் கட்டுரையில் நாங்கள் அதன் அற்புதமான நற்பலன்களைப் பற்றி உங்களுக்கு சொல்லவிருக்கிறோம் மேலும் அவகடோ முகப்பூச்சுக்களை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் அவகடோ

வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதை அவகடோவுடன் கலக்கும் போது இந்தக் கலவை ஒரு மாயஜாலம் போல செயல்படுகிறது.

பயன்படுத்துவது எப்படி
  • அவகடோ பழக்கூழை மசித்துக் கொண்டு வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள்.
  • இந்த முகப்பூச்சை உங்கள் முகம் முழுவதும் சமமாகப் பூசுங்கள்.
  • 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
  • வாரம் ஒரு முறை இந்த செயல்முறையை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.
முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் புரதம் மற்றும் ஏ, பி2 மற்றும் பி3 போன்ற பல்வேறு வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இது உங்கள் சரும செல்களில் ஈரப்பதத்தை தக்கவைத்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் உணரச் செய்கிறது.

பயன்படுத்துவது எப்படி

  • பாதி கனிந்த அவகடோவையும் வாழைப்பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • முட்டையிலிருந்து மஞ்சள் கருவை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு, அவகடோ மற்றும் வாழைப்பழத்தை கலந்துக் கொள்ளுங்கள்.
  • இதை நல்ல அடர்த்தியான பேஸ்டாகத் தயாரித்துக் கொள்ளுங்கள்.
  • இந்தக் கலவையை உங்கள் முகத்தில் சமமாகத் தடவுங்கள்.
  • 10 முதல் 15 நிமிடங்களுக்கு இந்தக் கலவையை உங்கள் முகத்தில் அப்படியே விட்டுவிடுங்கள்.
  • சாதாரண நீரில் அதைக் கழுவி அப்படியே உலர விடுங்கள்.
  • நீங்கள் கனவு காணும் சருமத்தைப் பெற இந்த செயல்முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.
க்ரீன் டீ மற்றும் அவகடோ முகப்பூச்சு

க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகளும் மற்றும் எபிகல்லோ கேடிசின் கலேட் (ஈஜிசிஜி) என்னும் வேதிப் பொருளும் அடங்கியுள்ளது. இது வீக்கத்திற்கு நிவாரணமளித்து மேலும் உங்கள் மென்மையாக்குகிறது. இந்த பொருட்கள் ஒன்றாகக் கலக்கும் போது உங்கள் சருமத்திற்கான ஒரு அற்புத முகப்பூச்சு கிடைக்கும்.

பயன்படுத்துவது எப்படி
  • ஒரு கைப்பிடி பச்சைத் தேயிலை இலைகளை நீரில் ஊறவிடுங்கள்.
  • ஒரு முழு அவகடோவை கிண்ணத்தில் மசித்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு முள் கரண்டி கொண்டு இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை உங்கள் முகம் முழுவதும் தடவுங்கள்.
  • 15 முதல் 20 நிமிடங்களுக்கு இந்தக் கலவையை உங்கள் முகத்தில் அப்படியே விட்டுவிடுங்கள்.
  • சாதாரண நீரில் அதைக் கழுவுங்கள்.
  • இந்த செயல்முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.

சிலருக்கு இதிலுள்ள பொருட்கள் ஓவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே எப்பொழுதும் பயன்படுத்தும் முன் முதலில் சருமப் பரிசோதனையை செய்யுங்கள்.