மனைவியால் கணவனுக்கு நடந்த கொடூரம்!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா், மாதேஷ் (45). இவர், தேன்கனிகோட்டை பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்திவருகிறார். கடந்த 20 நாள்களுக்கு முன், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீக்குண்டு என்ற இடத்தில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

இன்சூரன்ஸ் கொலை

மாதேஷ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் சத்தீஸ்குமார், தனது சந்தேகப் பார்வையை மாதேஷின் மனைவி ரேவதி மீது திருப்பி விசாரணை செய்துள்ளார். ரேவதி, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே, ஸ்பெஷல் கவனிப்பில் ரேவதியிடம் விசாரணை செய்தபோது, ‘சார் வேண்டாம் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன்’ என்று கதறியுள்ளார் ரேவதி.

 4 பேர் கைது

‘சார், எனக்கும் பென்னாகரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துவந்தது. எங்கள் தொடர்புக்குக் கணவர் மாதேஷ் இடையூறாக இருந்துவந்தார். மேலும், கணவர் மாதேஷ் 5 லட்சம் மதிப்பில் ஒரு இன்ஷூரன்ஸும், 45 லட்சம் மதிப்பில் இன்னொரு  இன்ஷூரன்ஸும் செய்திருந்தார். மாதேஷ் இறந்துவிட்டால் மொத்த பணமும் எனக்குக் கிடைத்துவிடும், அதன்பிறகு நாம் இருவரும் ஜாலியாக இருக்கலாம் என்று ஜெயபிரகாஷ் திட்டம் போட்டுக் கூறினார்.

 4 பேர் கைது

அதன்படி ஜெயபிரகாஷ், அரவது தம்பி வெங்கடேஷ், விக்னேஷ் மற்றும் எனது மகன் யோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, சிமென்ட் குடோனுக்கு கணவர் மாதேஷை காரில் அழைத்துச் சென்று, அடித்து,  ஓடும் காரில் இருந்து மாதேஷை கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்தோம். பிறகு, சாலையோரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதுபோல செட்டப் செய்தோம். ஆனால், காவல்துறை கண்டுபிடித்துவிட்டது” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.