தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக வவுனியாவை சேர்ந்த பொன்னுத்துரை அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் வெற்றி பெற்ற பிரதேசபை பிரதிநிதிகளின் பொதுக்கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாகாணசபை தேர்தலுக்கான பணி தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வட மாகாணத்தில் தங்கள் கட்சிக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்ற அக்கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமாகிய பொன்னுத்துரை அரவிந்தனை கௌரவப்படுத்தும் விதமாக கட்சியின் எதிர்காலம் குறித்தும் அவரின் பதவி உயர்த்தப்பட்டுள்ளது.
கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக ஏக மனதுடன், பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவர் இன்றிலிருந்து சர்வதேசம் தொடர்பான மற்றும் வவுனியா தொடர்பான அனைத்து கட்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.