வெறும் ஜூஸ் 30 நாட்கள் : முடிவில் என்ன பலன்?

பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்ச்சியாக சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் வெறும் ஜூஸை மட்டும் 30 நாட்கள் தொடர்ச்சியாக குடித்தால் என்ன நடக்கும்? என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க…

பொதுவாக 30 நாள் ஜூஸ் டயட் என்பது மிகவும் பிரபலமான டயட். அதுவும் இந்த டயட் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான ஒரு டயட்.

ஆனால் இந்த ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, திட உணவுகள், சர்க்கரை, இறைச்சிகளான மீன், முட்டை, கோழி, ஆடு போன்ற எதையுமே உட்கொள்ளக் கூடாது.

இந்த ஜூஸ் டயட்டினால் சிலருக்கு நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு பக்கவிளைவுகளும் உண்டாகும். அதனால் ஜூஸ் டயட்டை ஒருவர் மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

30 நாள் ஜூஸ் டயட்டினால் கிடைக்கும் பலன்கள்?
ஜூஸ் டயட்டை 30 நாட்கள் மேற்கொள்ளும் பெரும்பாலானோருக்கு முதல் 7 நாட்களிலேயே 10 கிலோ எடை குறையும் வாய்ப்புள்ளது. அதுவும் 3 நாள் முதல் 1 வாரம் வரை பின்பற்றுவது என்பது பாதுகாப்பானது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நம் உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் இதர டாக்ஸின்களை எதிர்த்துப் போராடி உடலினுள் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்குகிறது.
உடலினுள் உள்ள செல்கள் நன்கு ஊட்டம் பெற்று சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். இதனால் உடலில் ஆற்றல் நீடித்து, நீண்ட நேரம் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, உள்ளுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் குணமாகி, நன்கு செயல்பட ஆரம்பித்து, நாள்பட்ட நோய்களின் அறிகுறிகள் மறையும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்து 30 நாட்கள் தொடர்ந்து குடிப்பதால், நம் உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைத்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலியாகி, நோய்களின் தாக்கம் தடுக்கப்படும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சுத்தமாகி, அதன் ஆரோக்கியம் மேம்படும். அதனால் உடலினுள் உள்ள செல்கள் நன்கு ஊட்டம் பெற்று, தானாக சருமத்தின் அழகு மேம்பட்டு, பிரகாசமாக மாறும்.
உடலில் நீர் தேக்கத்தை உண்டாக்கும் அதிகப்படியான சோடியத்தின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
30 நாள் ஜூஸ் டயட்டில் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றின் சாற்றினை, ஜூஸ்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜூஸை எப்போதுமே தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும்.
கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழ ஜூஸ்களை வாங்கிக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது கட்டாயம்.
30 நாள் ஜூஸ் டயட்டை முடித்த பின், மெதுவாக திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அதிகமாக சாப்பிடக் கூடாது.
முக்கியமாக செரிமானமாவதற்கு தாமதமாகும் பிட்சா, பர்கர், பிரட் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பு
ஜூஸ் டயட்டை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் அதனால் உடலில் இருந்து கொழுப்புக்கள் கரைவதற்கு பதிலாக, தசைகள் குறைய ஆரம்பிக்கும்.

அதன் காரணமாக உடலில் நீரிழப்பு மற்றும் தசை இழப்பு ஏற்பட்டு உடலின் ஆற்றல் குறைந்து விடும்.