திறைமறைவில் சதி! ரணிலை காப்பாற்றும் முயற்சியில் மஹிந்த!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணக்கப்பாடு இதுவரையில் கிடைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு பதிலாக மாகாண சபை தேர்தல் ஒன்றை கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தரப்பிற்கும் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆலோசனை வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனை எதிர்வரும் வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பதற்கு கடந்த 14ஆம் திகதி கூட்டு எதிர்கட்சி தலைவர் கூடி தீரமானித்துள்ளதாகவும், இது தொடர்பில் ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.