யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய அரச அலுவலகத்தில் பணியாற்றும் அரச அலுவலர் ஒருவர், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு திருமணமான பெண்ணுடன் சேர்ந்து,
தனது வீட்டில் லீலைகள் புரிந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அலுவலரின் மனைவியான ஆசிரியை பத்திரகாளியாக மாறி, குறித்த அலுவலகத்துக்கு சென்று திருமணமான பெண்ணை தாக்கியதாகத் தெரியவருகின்றது.
யாழ் சுன்னாகத்தைச் சேர்ந்த அரச அலுவலர் ஒருவர், கந்தர்மடம் பகுதியில் தனது மனைவியின் சீதன வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த வீட்டில் மனைவியும் கணவரும் பிள்ளைகளும் மனைவியின் தாயும் தந்தையும் வசித்து வந்துள்ளனர்.
மனைவியின் தாயும், தந்தையும் கொழும்பு சென்ற பின், நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவரை கணவன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந் நேரத்தில், குறித்த வீட்டுக்கு மனைவியின் உறவினர் ஒருவர் வந்து நீண்ட நேரமாக வாசலில் நின்று மோட்டார் சைக்கிளில் ஒலி எழுப்பிக் கொண்டிருந்துள்ளார்.
அத்துடன் கணவனின் மோட்டார் சைக்கிளும் இன்னொரு பெண்களின் மோட்டார் சைக்கிளும் வீட்டு வளவுக்குள் நிற்கவே சந்தேகமடைந்த குறித்த உறவினர், பாடசாலையில் நின்ற ஆசிரியைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை தனது கணவனுக்கு தொலைபேசி எடுத்த போது பதில் வராததால் உறவினரை வீட்டு வளவினுள் மதிலேறிப் பாய்ந்து பார்க்கும் படி சொல்லியுள்ளார்.
தான் தனியே உள்ளே புகுந்தால் ஏதாவது விபரீதமாகிவிடும் என்பதால் அங்குள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியரையும் அயலவரான முதியவர் ஒருவரையும் சேர்ந்துக் கொண்டு உறவினர் வளவினுள் புகுந்துள்ளார்.
வீடு உள்ளே பூட்டிய நிலையில் இருந்ததை அவதானித்து வீட்டுக் கதவைத் தட்டிய போது உள்ளேயிருந்த கணவர் வெளியே வந்துள்ளார்.
தான் நித்திரையாகிவிட்டதாக கூறியுள்ளார். இந் நிலையில் மனைவியும் அந் நேரத்தில் கணவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் எடுத்தபடி இருந்த போது கணவர் அப்போதுதான் அதற்கும் பதிலளித்துள்ளார்.
இச் சம்பவங்களால் அயலவர்கள் சிலரும் அங்கு வந்துள்ளார். உறவினரால் ரீச்சருக்கு குறித்த வீட்டில் இன்னொரு பெண்களின் மோட்டார் சைக்கிள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பாக கணவரை மனைவி தொலைபேசியில் கேட்டுள்ளார்.
அதற்கு கணவன் அளித்த பதிலில் சந்தேகம் கொண்ட மனைவி தனது உறவினரை வீட்டினுள் புகுந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
இருப்பினும் உறவினர் அவ்வாறு செய்யாது அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது அயலில் உள்ள உறவுகளுக்கு மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வீட்டுக்குச் சென்று நிலைமையை பார்க்கும் படி கூறியதால் அயலில் உள்ள மனைவியின் தாயின் சகோதரி வீட்டினுள் புகுந்து பார்க்க முற்பட்ட போது கணவர் அவரைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இதையடுத்து குறித்த வீட்டினுள் அயலில் உள்ள சிலர் கணவனைத் தள்ளியபடி உள்ளே சென்றுள்ளனர். அங்கு படுக்கை அறைக்குள் திருமணமான பெண் ஒருவர் இருப்பதை கண்டு பிடித்து அப் பெண்ணை விசாரித்துள்ளனர்.
அப் பெண் சரியான விபரங்கள் கொடுக்க மறுத்த போது அப் பெண்ணின் கைப் பையைப் பறித்து பரிசோதனை செய்த போது குறித்த பெண்ணும் ரீச்சரின் கணவரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் ரீச்சருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் குறித்த பெண்ணையும் வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். மனைவி பாடசாலையால் வருவதற்கிடையில் கணவன் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.
கணவர் வரும்வரை காத்திருந்த மனைவி கணவர் வந்தபின் பத்திரகாளியாக மாறி அட்டகாசம் செய்துள்ளார்.
அத்துடன் நேற்று குறித்த பெண் அலுவலரைத் தேடி அந்த அலுவலகத்தின் பிரிவு ஒன்றுக்கு சென்ற மனைவி அப் பெண்ணை கண்டபடி ஏசி தனது செருப்பாலும் அலுவலகத்துக்குள்ளேயே அடித்துள்ளார்.
இச் சம்பவத்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறி வேடிக்கை பார்த்ததாகத் தெரியவருகின்றது.
குறித்த சம்பவத்தை அடுத்து அலுவலக பொறுப்பாளரால் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனைவி இன்றும் குறித்த அலுவலகத்துக்குச் சென்று பொறுப்பாளருடன் முரண்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.