யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்று(16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.