அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகத்திற்கு அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க மக்கள் மிகவும் சிரமப் படுவதால் அச் சாலையின் குறுக்கே கடந்த மாதம் முதல் மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று திடிரென குறித்த 950 தொன் எடையுள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது.
தீயணைப்புத்துறையினர் மற்றும் பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விபத்தினால் 6இற்கும் மேற்பட்டோர் பலியானதோடு படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.