நடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இவர்கள் மும்பையில் கடற்கரை அருகில் புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். 8 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீட்டின் மொத்த விலை ரூ.34 கோடி என்று கூறப்படுகிறது.
அந்த வீட்டுக்கான உள் அலங்கார வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்காலிகமாக வசிக்க மும்பையிலேயே ஆடம்பர வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்துள்ளனர்.
இந்த வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டெபாசிட் ஆக ரூ.1.50 கோடி கொடுத்துள்ளனர். 24 மாதங்கள் இந்த வீட்டில் தங்க முடிவு செய்துள்ளனர்.
அதன்பிறகு புதிய வீட்டுக்கு குடிபோக திட்டமிட்டு உள்ளனர்.