ஆசிய அளவில் பிரபலமடைந்த பாம்புகளின் காதலன் என அறியப்பட்ட நபர் பாம்பு தீண்டி மலேசியாவில் மரணமடைந்துள்ளார்.
ஆசிய அளவில் snake whisperer என அறியப்பட்டவர் 33 வயதான அபு ஜரின்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவில் பணிபுரிந்து வரும் அபு ஜரின், பாம்புகளின் மீது கொண்ட தீராத காதலால், பாம்புகளை மீட்கும் பணியிலும் தன்னார்வமாக கலந்து கொண்டு வந்துள்ளார்.
மட்டுமின்றி ஆசிய அளவில் நடைபெற்ற திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு காலிறுதி வரை சென்றார்.
மட்டுமின்றி விஷம் கொண்ட பாம்புகளுக்கு எவ்வாறு முத்தம் தருவது என்பது போன்ற நிகழ்ச்சிகளால் தொலைக்காட்சி ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர் அபு ஜரின்.
இந்த நிலையில் கடந்த திங்களன்று பாம்பு ஒன்றை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த அபுவை, அதே பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அபு ஜரின், மலேசியாவின் புகழ்பெற்ற ஹாஜி அஹ்மத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அபு ஜாரினை பாம்பு தீண்டுவது இது முதன் முறை அல்ல, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு முறை பாம்பு தீண்டியதில் சுருண்டு விழுந்த அபு சில நாட்கள் மருத்துவமனையில் கோமாவில் கிடந்துள்ளார்.
தாய்லாந்து பத்திரிகை ஒன்று அபு ஜாரின் பாம்பினை காதலியாக ஏற்றுக் கொண்டதாக கூறி செய்தி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கூட்டியது.
அந்த தகவல் உலகம் முழுவதும் பரவவே, குறித்த செய்தியை மறுத்த அபு ஜரின், தமது புகைப்படத்தையும், பாம்பின் புகைப்படத்தையும் இணைத்து தாய் பத்திரிகை கட்டுக்கதை வெளியிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.