ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அதிகாரிகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பல்வேறு உள்ளக குழுக்களுடன் இது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.