சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை ஒட்டாவாவில் உடைப்பு!

சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் அமைந்துள்ள, ஹில்டா ஜெயவர்த்தன பௌத்த மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக உள்ள தோட்டத்தில், சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட புததர் நிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் புத்தர் சிலையின் தலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக்காலை 7.30 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் ஒட்டாவா காவல்துறையினர், இதற்குப் பின்னால் வெறுப்புணர்வு நடவடிக்கைகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.