தமிழக பட்ஜெட்டை அலசிய மய்யம் கமல்ஹாசன்!

தமிழக அரசு 2018-19 ஆம் நிதியாண்டிக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் காலை 10.30 மணிக்கு தொடங்கிய 1.30 மணி வரை வாசிக்கப்பட்டது. மொத்தம் 157 நிமிடம் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக பட்ஜெட்டை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியதாவது:  

2018-19 தமிழக பட்ஜெட் – எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து என பட்ஜெட் தனது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கியமானவை:-

1. நிதிநிலை அறிக்கை- எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க சிறந்த பிரதிநிதிகள் தேவை
2. வேலைவாய்ப்பு- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எங்கே?
3. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்க்கான தொகை சென்ற வருடம் போல கானல் நீராய் ஆகிவிடுமோ?
4. குடிமராமத்து திட்டத்திற்கு சென்ற வருடம் ஒதுக்கிய நிதி எங்கே போனது?
5. பள்ளி கல்வி- எம் பிள்ளைகள் தேசிய சராசரியை விட பின் தாங்கியிருக்கிறார்கள். நல்ல விளைவுகள் தேவை.
6. தொழில் வளர்ச்சி- தமிழ்நாட்டில் தொழில் புரிவோருக்கு ஊழலும், தாமதமுமின்றி உரிமங்கள் வழங்கப்பட வேண்டும்.
7. நகர மேம்பாடு- அளவிற்கு அதிகமாய் ஆசை படுகிறோமா?
8. இந்து சமய அறநிலையத் துறை- இந்த நிதியாண்டிக்கான பட்ஜெட்டில், இத்துறை குறித்து அறிவிப்பு இல்லை. ஏன்?
9. வக்ஃப் போர்டு- சிறுபான்மையினர் நம்பிக்கையை எப்படி பெறுவீர்?
10. கடன்- ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45,500 ரூபாய். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.