ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்? தண்ணீரை இப்படி குடிக்க பழகுங்கள்!

நமது உடலில் 70-75 சதவீதம் வரை நீரால் ஆக்கப்பட்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு சீரான மெட்டா பாலிச செயலுக்கும் 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டியுள்ளது.

ஜப்பானியர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே தான் அவர்கள் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் அது வெளியேற்றி விடுகிறது.

உடல் எடையை குறைக்க நினைத்தால் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடியுங்கள். இது உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை 25% வரை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகும் போது மலக்குடல் சுத்தமாகி மலம் கழித்தலை சீராக்குகிறது.

வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம் உடலை தாக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைத்து தலைவலி வராமல் தடுக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது குடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுவதால் தானாகவே பசி ஏற்படும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அழகான பொலிவான சருமத்தை பெறலாம். கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நமது சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்களால் ஏற்படுகிறது.

காலையில் எழும் போதே ரெம்ப களைப்பாக சோம்பேறியாக நினைத்தால் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை மட்டும் குடியுங்கள்.

இதன் மூலம் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட முடியும்.