சேற்றுக்குள் மூழ்கிய BMW கார்

தலவத்துகொட கீல்ஸ் சுப்பர் கடைக்கு முன்னால் BMW மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத BMW மோட்டார் வாகனம் இன்னும் சில வாகனங்களுடன் மோதி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது.

BMW i8 ரக மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.