நெய் இந்த நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது!

நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் போன்ற ஆரோக்கிய குறைபாடுக ஏற்படும் என்று கூறுவார்கள்.

ஆனால் அது நாம் நெய்யை எந்த முறையில் எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்து அமையும்.

நெய்களில் எத்தனை வகை இருந்தாலும் அவற்றில் மிகச் சிறந்தது பசு நெய்யே. அதுவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் என்பது இந்த பசு நெய்யைத் தான்.

பசு நெய் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அப்பொருளின் சுவை மற்றும் செயல்படும் திறனை அதிகரிக்கும் தன்மையுடையது.

கொடுக்கப்படுகிற உணவு அல்லது மருந்தினை நெய்யுடன் கலந்து கொடுக்கும் போது, அது மிக விரைவாக மூளையைச் சென்றடைகிறது.

அதன் மூலம் சிந்தனைத்திறன், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும்.

நெய்யை எடுத்துக் கொள்ளும் முறை
காலை, மதியம், மாலை மற்றும் இரவு போன்ற நேரங்களில் மதிய உணவில் மட்டுமே முறையாக தயாரிக்கப்பட்ட பசு நெய்யை சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏனெனில் அதனால் நம் உடலில் உள்ள நஞ்சு மற்றும் பித்தத்தை குறைத்து, கண் பார்வைத் திறனை அதிகரிக்க உதவுவதோடு, விந்தணுக்களை அதிகரிக்க செய்வதிலும் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

நெய் உடல் எடையை அதிகரிக்குமா?
நெய்யை அதிகமாக விரும்பி சாப்பிடுவோர்க்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதுவே ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.

பசு நெய்யை தகுதியானவர்கள், தகுதியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் ஏற்படாது. எனவே பசு நெய்யானது நம் உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும் என்பதே உண்மை.