உடற்பயிற்சி இல்லாத உடல் சதை உறுதியாக இருக்காது, அந்தச் சதையில் திரவம் சேர்ந்திருக்கும். அதோடு கழிவுப் பொருட்கள் நீங்குவது தடைபட்டு, ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும்.
அதனால் எப்போதும் மந்தமான உடல், இதயக்கோளாறு போன்று அனைத்து விதங்களிலும் உடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
ஆனால் தினசரி சிறிய உடற்பயிற்சிகள் செய்து வந்தாலே தசைகளும், நரம்புகளும் வலிமை பெற்று, உடல் எப்போதும் கட்டுக்கோப்புடன் திகழும்.
நடக்கும் பயிற்சி
உடற்பயிற்சி அனைவருக்கும் ஏற்றது. அதுவும் நடைப்பயிற்சி செய்யும் போது சுறுசுறுப்பாக நீண்ட தூரம் நடக்கலாம். நடக்கும் போது சுவாசத்தை ஆழமாக இழுத்து விட வேண்டும்.
ஆனால் முறையாக நடக்க வேண்டும். எப்படி உடலை அசைத்து நடக்க வேண்டுமோ அப்படி அசைத்து, சமமான அடிகள் வைத்து கடைசி வரையில் ஒரே வேகத்துடன் நடப்பதே சிறந்தது.
நடக்கும் பாதை வளைந்து வளைந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.
வீட்டிலே செய்யும் பயிற்சி
வீட்டிற்குள் இருந்தபடியே பல்வேறு உபகரணங்கள் இல்லாமல் பயிற்சி செய்யலாம்.
அதாவது கைகள் மற்றும் கால்களை வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது என்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக் கூடியவை ஆகும்.
சுவாசப் பயிற்சி
அடிவயிற்றை இழுத்து சுவாசத்தை வெளியே விடுவதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது மிகவும் எளிய பயிற்சியாக இருந்தாலும்,
இதனால் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்பட்டு, உணவுச்சத்துக்கள் உடலால் நன்கு கிரகிக்கப்பட வைக்க உதவுகிறது.
குறிப்பு
உடற்பயிற்சிகளில் எதுவாக இருந்தாலும் படிப்படியாக அந்த பயிற்சிகளின் தன்மை மற்றும் கால அளவுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.