யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில் நுட்ப மையத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வின் தலைவராக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முகாமையாளர், யாழ். ஆயர் யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை விளங்குகிறார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுநர், வட மாகாண முதலமைச்சர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.