கும்பகோணம் அருகே, அத்தியூருக்குள் 5 அடி நீளமுள்ள முதலை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அத்தியூரைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணியன், சில தினங்களுக்கு முன் தனது வயலில் விளைந்திருந்த பயிரை அறுவடை செய்திருக்கிறார். மீண்டும் தனது வயலுக்குச் சென்றபோது, அங்கு ராட்சத முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஊருக்குள் செய்தி பரவியதும் மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதலையை அங்கிருந்து வெளியேற்ற வழி தெரியாமல் தவித்திருக்கிறார்கள். குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்ற அச்சத்துடனே இருந்திருக்கிறார்கள். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணம் வனத்துறைக் காவலர்கள் அங்கு வந்து, முதலையை சாதுர்யமாகப் பிடித்துச்சென்று கொள்ளிடம் ஆற்றில் விட்டுள்ளார்கள். 5 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை, சில மணி நேரம் ஊர் மக்களைப் பதற்றமடைய வைத்துள்ளது.