சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
”பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் கூட அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறும்.
என்னுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இந்தப் பிரேரணைக்கு ஆதரவு அளிக்க பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.