யாழ் மாணவியின் உயிரை பறித்த கொடூர நோய்!!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் கொடூரமான நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் பிரியங்கா நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட சிவநேசன் பிரியங்கா நீண்டகாலமாக மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மகாஜன பெண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் மூத்த வீராங்கனையான சிவநேசன் பிரியங்கா பல சாதனைகளை புரிந்துள்ளார்.

சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் மாணவி ஒருவர் கொடிய நோயினால் உயிரிழந்தமை யாழ். குடாநாட்டு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.