இத்தாலியல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த நான்காம் திகதி நடைபெற்ற தேர்தலில் நிரஞ்சன் வாஸ் இலங்கையர் வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாகாண சபைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த நான்காம் திகதி நடைபெற்றது. இதில் இத்தாலி, லொம்பார்தியா மாகாண சபைக்கு ஜனநாய கட்சியின் சார்பில் நிரஞ்சன் வாஸ் போட்டியிட்டார். அதில் அவர் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நீர்கொழும்பில் பிறந்த நிரஞ்சன் வாஸ், நைனாமடுவில் உள்ள ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் வென்னப்புவ தூய ஜோசப் வாஸ் கல்லூரிக்கு சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
1977ஆம் ஆண்டு கணித பிரிவில் உயர் கல்வியை தொடர்ந்தவர் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளார்.
எப்படியிருப்பினும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக அவர் தனது முதலாவது தொழிலையை ஆரம்பித்துள்ளார்.
1980ஆம் ஆண்டு தனக்கு நெருக்கமானவர்கள் ஊடாக அவர் இத்தாலிக்கு சென்று தற்போது அரசியலில் ஈடுபடும் அளவு வளர்ச்சியடைந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.