வழிப்பறி நகை அறுப்பில் ஈடுபட்ட ஐயரும் மாணவனும் கைது!

வாகனம் ஒன்றிற்கு லீசிங் பணம் கட்டுவதற்காக வழிப்பறி நகை அறுப்பில் ஈடுபட்ட பூசாரி உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவன் ஒருவரும் நேற்றை தினம் (16) மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் அளவெட்டி மற்றும் கொக்குவில் பகுதியினை சேர்ந்த இரு இளைஞர்கள் என பொலிஸார் கூறினர்.

கடந்த 14ம் திகதி மானிப்பாய் இனுவில் வீதியில் வைத்து வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த இமிட்டேசன் நகையினை அறுத்த குற்றச்சாட்டில் முதலாவது சந்தே நபரான பூசாரி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பூசாரியுடன் இணைந்து செயற்பட்ட தொழில் நுட்ப கல்லூரி மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்தே இவ்வாறு வழிப்பறி நகை கொள்ளையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இளவாலை மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வழிப்பறி சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதுடன் பொலிஸாரின் விசாரணையினால் இரண்டு சங்கிலிகளும் கைபெற்றப்பட்டுள்ளது.

மேலும் நகை அறுப்பதற்காக ஓட்டி செல்லும் இரண்டு மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.