புதிய காதலுக்காக மிஸ்டர் பீன் தியாகம் செய்த ஆடம்பர மாளிகை!!

காதலுக்காக எதனையும் இழக்கத் தயார் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் தனக்குச் சொந்தமான, தான் மிகவும் விரும்பும் 10 மில்லியன் பவுணுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொகுசு மாளிகையை முன்னாள் மனைவியான இந்தியப் பிரஜை சுனேத்ரா சாஸ்திரிக்கு அண்மையில் வழங்கியுள்ளார்.

63 வயதான மிஸ்டர் பீன். அவர் அதனை இரண்டு வருடங்களாக நடைபெற்ற விவாகரத்து வழக்கின் பின்னரே நஷ்டஈடாக வழங்கினார்.

இங்கிலாந்தின் தெற்குப் பிராந்தியத்தில் அழகான மலைத்தொடருக்கு அண்மையில் அமைந்த கோல்டன்வர்ன்ட்ஸில் அதிநவீன சொகுசு மாளிகையை அமைக்க மிஸ்டர் பீன் என்ற உலகம் போற்றும் இங்கிலாந்தின் பிரபல நடிகரான 63 வயதுடைய ரொவன் எட்கின்சன் தனது அயலவர்களுடனும் மற்றும் கட்டட நிர்மாணக் கலைஞர்களுடனும் ஒரு தசாப்த காலமாக போராட்டதில் ஈடுபட்டிருந்தார்.

அவ்வாறான பாரிய மோதலுக்குப் பின்னர் தனது கனவு மாளிகையை உருவாக்கிய காதல் நடிகன் தனது 56 வயதான முதல் மனைவியை கைவிட்டு 34 வயதான அழகிய நடிகை லுயிஸ் போர்டின் அரவணைப்பை சட்டபூர்வமாகப் பெற்றமை அவ்வாறான போராட்டத்தின் பின்னராகும்.

பி. பி. ஸி. நிறுவனத்தின் ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்த சுனேத்திராவுடன் இரண்டு தசாப்தகாலமாக தொடர்ந்த திருமண வாழ்க்கையை நிறைவு செய்த மிஸ்டர் பீன், அறிவிப்பாளரும் நடிகையுமான லூயிஸுடன் காதல் கொண்டது நான்கு வருடங்களுக்கு முன்னராகும்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த லூயிஸ் அப்போதே இந்த இங்கிலாந்து அரச குடும்பத்தாரின் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார்.

மேலும் பிரித்தானிய அரச குடும்பத்தின் விவரண தொலைக்காட்சி கதைத் தொடரின் இரண்டாவது பாகத்தில் வில்லியம் இளவரசரின் மனைவியான கேட் இளவரசியின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார். பின்னர் Crashing தொலைக்காட்சித் தொடரிலும் Fast Girls திரைப்படத்திலும் நடித்து பிரபலமடைந்தார்.

மிஸ்டர் பீனுக்கும் லூயுசுக்கும் இடையே 2012ம் ஆண்டிலேயே காதல் மலர்ந்தது. இருவரும் ‘வெஸ்ட் என்ட்’ மேடை நாடகத்துக்கு பங்களிப்பைச் செய்த போதே ஒருவரையொருவர் விரும்பினார்கள்.

ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இந்தக் காதல் மிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கையை கசப்பாக ஆக்கும் நிலைவரை கொண்டு சென்றது.

Rowan-Atkinson--a  புதிய காதலுக்காக மிஸ்டர் பீன் தியாகம் செய்த 10 மில்லியன் பவுண் பெறுமதியான ஆடம்பர மாளிகை!! Rowan Atkinson a

 

2014ம் ஆண்டு சுனேத்திராவுடனான திருமணம் அவரின் இந்த நிலையால் முறிவுற்றது. தனது வயதான கணவரின் புதிய காதல் தொடர்பில் கோபமும், விரக்தியும் அடைந்த சுனேத்ரா பிள்ளைகளான 25 வயது பென் மற்றும் 21 வயதான லிலியுடன் கணவரைப் பிரிந்து சென்றார். அது மட்டுமல்ல விவாகரத்து வழக்கையும் தொடுத்தார்.

பிள்ளைகள் இருவருடன் வேறாக வாழ வேண்டிய நிலையை எண்ணி இந்தியப் பெண்ணான சுனேத்ரா மிகவும் கோபமடைந்தார்.

இரண்டு தசாப்த காலமாக வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட தனது கணவர் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை நாடுவதை எந்தவொரு பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள்.

அவர் பெருந்தொகையான பணத்தை (80 மில்லியன்) நஷ்டஈடாக அதனாலேயே கோரினார். மிஸ்டர் பீன் முன்றாவது தடவையாகவும் இச்சந்தர்ப்பத்திலேயே தந்தையானார்.

இறுதியில் தனது இளம் மனைவிக்காக தனது உயிரைவிட மேலாக நேசித்த சொகுசு மாளிகையை கைவிடத் தீர்மானித்தார்.

நஷ்டஈடு குறித்து தொடர்ந்து ஆராய நேரகாலமும் அவருக்கு இல்லை. ஏனென்றால் புதிதாகத் தந்தையானதால் அவர் வேறு உலகிலேயே இருந்தார். மேலும் இளம் மனைவியின் அரவணைப்பில் இருந்தவருக்கு முன்னாள் மனைவி வயதானவராக காட்சியளித்தார்.

images  புதிய காதலுக்காக மிஸ்டர் பீன் தியாகம் செய்த 10 மில்லியன் பவுண் பெறுமதியான ஆடம்பர மாளிகை!! images2

 

இளம் காதலால் பூரித்துப் போயிருந்த அவருக்கு தன்னுடைய முதுமை மறந்து போய்விட்டது. தாத்தாவாக வேண்டிய வயதில் உள்ள தமது தந்தையார் புதிதாக தந்தையானது குறித்து முதல் தாரத்தின் பிள்ளைகளான பென்னும், லிலியும் மிகவும் கோபமடைந்துள்ளார்கள்.

தங்களது தந்தையின் அன்பைப் பறித்துக்கொண்ட லூயிஸின் மீதும் அதை விட வெறுப்படைந்துள்ளார்கள்.

அவர்கள் தற்போது தனது தாயாருக்குக் கிடைத்த சொகுசு மாளிகையில் வசிக்கத் தயாராகி வருகின்றார்கள்.

தமது தந்தையின் முதற் பெயரை அவர்கள் தவிர்த்து தாயின் முதற்பெயரையே அவர்கள் தற்போது பாவிக்கின்றார்கள்.