பாம்பு டான்ஸ் ஆடிய வங்கதேச அணி- வீடியோ இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வங்கதேச அணி திரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து வீரர்கள் மைதானத்தில் பாம்பு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.