நித்யானந்தா விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக்கொண்டார்!

இளம்பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக் கொண்டதாகவும், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது எனவும் நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நித்யானந்தா ஆசிரமத்தில் அவரின் சீடையாக இருந்த பெண் கடந்த 2010ம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

அப்போது குற்றவியல் புலனாய் துறையில் ஆஜரான நித்யானந்தா, தான் ஆண்மையற்றவர் என கூறினார்.

இதனையடுத்து பல சட்டப்போராட்டத்துக்கு பின்னர், கடந்த 2014ம் ஆண்டு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், நித்யானந்தா ஆண்மை உள்ளவர் என்றும், அவருக்கு பாலியல் நோய் எதுவும் இல்லை என்றும் ராமநகரா அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நித்யானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய ராமநகரா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் குற்றச்சாட்டு சொல்லும் பெண் அவரிடன் விருப்பத்துடன்தான் நித்யானந்தா உடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். எனவே அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது.

அப்பெண் ஏற்கனவே பல ஆண்களுடன் தொடர்பு வைத்தவர், அவருக்கு பாலியல் சம்பந்தமான நோயும் உள்ளது.

நித்யானந்தாவிடம் இருந்து பயன்களை பெற அவரிடம் தொடர்ச்சியாக அப்பெண் பாலியல் உறவு வைத்திருந்தார்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞர் கூறுகையில், நித்யானந்தா தொடர்ச்சியாக முரண்பட்ட கருத்துகளை கூறிவருவதாகவும், தீவிர விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.