நடராஜனைப் பார்க்க வைகோ, திருமாவளவன்…..!

உடல்நலம் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனை சந்திக்க வைகோ மற்றும் திருமாவளவன் சென்றுள்ளனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்தநிலையில், இன்று திடீரென்று நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரைச் சந்திப்பதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்றுள்ளனர். நடராஜன் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.