பொதுவாக தலைவலி வரும் காரணங்களில் டென்ஷனே முக்கிய காரணம். தலைவலி வந்தால் அதற்கு பல காரணங்கள் உண்டு.
வேலை பளு, சேட்டைகள் செய்யும் குழந்தைகளை பராமரிப்பது, அதிக நேரம் பயணம் செய்வது, சரியான தூக்கமின்மையால் இருந்தால், பசியினால் கூட தலைவலி வரலாம்.
தலைவலி வந்தால் அவை சாதாரண டென்ஷன் தலைவலியா அல்லது ஒற்றை தலைவலி என்று அழைக்கப்படும் மைக்ரைன் என்ற தலைவலியா என்று தெரிந்து செயல்பட வேண்டும்.
அவ்வாறு வரும் தலைவலி தினமும் வருகின்றதா? வலியை தாங்கிக் கொள்ள முடியாதபடி உள்ளதா? வாந்தி மயக்கம் மற்றும் உடற் சோர்வுடன் கூடிய வலி ஏற்படுகின்றதா? நீண்ட காலமாக இந்த தலைவலி தொடருகின்றதா? போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
அவ்வாறில்லாமல் சாதாரண தலைவலிக்கு மருந்து மாத்திரைகளை குறைத்து தலைக்கு நல்ல மசாஜ் செய்துக் கொண்டாலும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும். அவ்வாறான டென்ஷன் தலைவலி வரும்போது,
இவ்வாறு தலையின் ஒவ்வொரு பாகத்திலும் 5-7வினாடிகளுக்கு மசாஜ் செய்வதன் மூலமாக டென்ஷன் தலைவலிக்கு தீர்வு காணலாம்.