நம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.
குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.
இவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களிலும் அன்றாடம் எடுக்கலாம்.
அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.
உங்களுக்கு தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதெனில், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
இதய ஆரோக்கியம்
மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.
ஆன்டி-ஏஜிங்
மலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும்.
இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
கண் பார்வை
மலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண் பிரச்சனைகளான கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும்.
ஆகவே பார்வை பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நினைத்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.
வாய் ஆரோக்கியம்
மலை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும்.
மேலும் மலை நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு வாயில் பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.