வீட்டிற்குள்ளாக துணிகளை துவைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இங்கே காணலாம்.
- ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள், வீட்டிற்குள் காயவைக்கப்படும் துணிகளில் வந்து ஒட்டிக் கொள்ளும். இதுவே துணிகளில் ஒருவித வாடையை உண்டு பண்ணுகிறது. இந்த ஆடையை ஒருவர் அணிந்தால், நுண்ணுயிர்கள் மூச்சுக்குழல் வழியாக நுழைந்து நுரையீரல் சார்ந்த நோய்களை உண்டாக்கும்.
- அதில் ஆஸ்துமா உள்ளிட்டவை அடங்கும். இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புத் திறன் அவசியம். ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவாக இருந்தால், நுண்ணுயிர்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- பொதுவாக வீட்டில் துணியை காயவைத்தால், நுண்ணுயிர்களின் வளர்ச்சி 30% அதிகமாக இருக்கும். எனவே துணிகளை உலர்த்த காற்றோட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டும்.