சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் 4இல் கற்கும் பிரபாகரன் ஹரிகரன் ( 9) என்ற மாணவனே புத்தக பை தடுக்கி விழுந்த உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சுழிபுரத்தில் நடந்துள்ளது.
மாணவன் நேற்றுமுன்தினம் பாடசாலைக்குச் சென்றபோது புத்தகப் பை தடுக்கி விழுந்து மயக்கமடைந்தான். ஆசிரியர்கள் அவனைச் சங்கானை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும் சிறுவன் வழியிலேயே உயிரிழந்துவிட்டான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உடற்கூற்றுச் சோதனைக்காக உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.