ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தங்களது கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதத்தில் இருந்து கூடுதல் கவனத்துடன் சில முக்கியமான விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பிரசவத்திற்கு முன் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
கர்ப்பிணி பெண்கள் தங்களின் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன் எவ்வித திட உணவுகளை சாப்பிடக் கூடாது.
ஏனெனில் பிரசவத்தின் போது வயிற்றில் உணவு இருந்தால், பிரசவத்தில் சிரமங்கள் ஏற்படலாம். கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும் போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம்.
அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும்.
அதுவும் சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.
ஒருவேளை சாப்பிட வேண்டுமென்றால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கலாம்.
அதனால் வயிறு நிரம்பி இருக்காது. பிரசவம் மற்றும் சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தடைகள் ஏற்படாது.