இந்தியாவில் மருமகளை வாளால் வெட்டி கொன்ற மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் நகரை சேர்ந்தவர் முகேஷ் ராஜ்புட். இவர் மனைவி உஷா தேவி (32) தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முகேஷ் கடுமையாக உழைத்த நிலையில், உஷாவும் தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மருமகள் வேலைக்கு செல்வதை விரும்பாத அவரின் மாமனார் மம் ராஜ் (62) இது நமது குடும்பத்துக்கு எதிரானது என கூறி எதிர்த்துள்ளார்.
ஆனால் இதை உஷா கேட்கவில்லை, இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்று கொண்டிருந்த உஷாவை சாலையில் வழிமறித்த ராஜ் தான் வைத்திருந்த வாளால் அவர் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் உஷா சடலத்தை கைப்பற்றிவிட்டு ராஜை கைது செய்துள்ளனர்.